Thursday, September 22, 2011

அம்மா

மூன்று எழுத்து முதல் எழுத்து

அன்பு அதனுள் அடக்கம்

பாசம் அதனுள் உறக்கம்

உயிர் அதனுள் தொடக்கம்

உயிர் மெய் அதன் முடிவு.

Tuesday, September 20, 2011

காலைவிடியுமென்று

தினமும் எழுகின்றேன்
காலை விடியுமென்று
கதிரவன் வருவதே
நிச்சயமானது
விடியல் வரவில்லை

நினைத்துப் பார்க்கிறேன்
முன்னய ஞாபகம்
வயல் வெளியோரத்தில்
பட்டம் விட்டதையும்
பெருவெட்டி மதகினிலே
குந்தி இருந்ததையும்
நினைத்துப் பார்க்கிறேன்

அம்மா அழைக்கும் போது
சாப்பிடும் ஞாபகம் வரும்
இன்னும் வரவில்லையா
அப்பாவின் திட்டுவரும்
ஆனாலும் கறிசு மட்டும்
அப்போது வருவதில்லை
ஆறுமணிக்கும்
 ஆலமரக் காற்று
ஆளோடுரசும்
நினைத்துப் பார்க்கிறேன்
காலை விடியுமென்று.

Monday, September 19, 2011

ஒன்று படுவோம்

கிழக்கு வானத்தைப் பார்க்கிறேன்
சூரியன் கண்ணீர் வடிக்கின்றான்
ஓ.........
தமிழ் அது சாகும் காலம்
பட்டி தொட்டி எல்லாம்
வீராப்பு பேசிய காலம் அது
இன்றோ இதுவென
சூரியன் கண்ணீர் வடிக்கின்றான்
                                         யாதவன்

ஒன்று படுவோம்

கிழக்கு

ஒன்று படுவோம்


எரிகின்ற நெருப்பை அணைக்க ஒன்று படுவோம் வாரீர்......