Tuesday, April 10, 2012

பாலர்

பள்ளி  செல்லும்
சிறுவர்  நாமும்
அனிச்சம்  பூவே
ஆசான்  நீங்கள்
முகர்ந்து  பார்த்தால்
வாடி  விடுவோம்

Friday, October 14, 2011

தமிழ்

நிறைவாகத்தொடங்குவது
தமிழ்
தனித்துவம் கொண்டது
தமிழ்
அழகுநிறைந்தது
தமிழ்
வன்மை கொண்டது
தமிழ்
மென்மை கொண்டது
தமிழ்
இடையிலும் நிற்பது
தமிழ்
முழுமை கொண்டது
தமிழ்
சங்கம் வளர்த்தது
தமிழ்
இவையெல்லாம் உள்ளது
தமிழ்
இன்றும் இல்லாதது
தமிழ்

Saturday, October 1, 2011

நம் ஆலயங்கள்

ஆலயங்கள் இருந்தன
அறிவைப்பெற்று
அன்பைப் பெருக்கி
பண்பாட்டை வளர்த்து
ஆன்மாவை ஈடேற்ற

இன்று
ஆலங்கள் இருக்கின்றது
களியாட்ட கூத்திற்கும்
இறைவனுக்குப் ஏற்காது
மௌனித்து விட்டான்

போதிப்பவரும்
வேதிப்பவரும்
கையாசிப்பதிலே,,,,,,,

காணிக்கை

திருவிழாத் தொடங்கினால் அடியவரைக்காணலாம்
நேசமுடன் வீடு வந்து கைகூப்பி வரம் கேட்பார்
விழாவது முடிந்த கையோடு
வீடு போய்ச் சேர்ந்திடுவார்

இடை நடுவில் யாரும் வந்திலர் வாசல் பக்கம்
காதிலே சில செய்தி வந்து விழும்
வெளிநாட்டில் ஏதோ வீடுபற்றி
திருவிழாச் செய்வது
அப்படி என்று
கதைத்தசெய்தி

இங்கோ இறைவா இதுவே எமது கோரிக்கை என்று
காணிக்கை நடக்கும் நம்பியே
எமது கைகளும் குத்தும்
மீண்டும் அடுத்த வேழ்வி
வரும்....................
காணிக்கைக்கு.

Thursday, September 22, 2011

அம்மா

மூன்று எழுத்து முதல் எழுத்து

அன்பு அதனுள் அடக்கம்

பாசம் அதனுள் உறக்கம்

உயிர் அதனுள் தொடக்கம்

உயிர் மெய் அதன் முடிவு.