Saturday, October 1, 2011

காணிக்கை

திருவிழாத் தொடங்கினால் அடியவரைக்காணலாம்
நேசமுடன் வீடு வந்து கைகூப்பி வரம் கேட்பார்
விழாவது முடிந்த கையோடு
வீடு போய்ச் சேர்ந்திடுவார்

இடை நடுவில் யாரும் வந்திலர் வாசல் பக்கம்
காதிலே சில செய்தி வந்து விழும்
வெளிநாட்டில் ஏதோ வீடுபற்றி
திருவிழாச் செய்வது
அப்படி என்று
கதைத்தசெய்தி

இங்கோ இறைவா இதுவே எமது கோரிக்கை என்று
காணிக்கை நடக்கும் நம்பியே
எமது கைகளும் குத்தும்
மீண்டும் அடுத்த வேழ்வி
வரும்....................
காணிக்கைக்கு.

No comments:

Post a Comment